அலுவலக வெப் ஆப் · 4 நிமி
பில்லில் நிறுவனப் பெயர், லோகோ, GST விவரங்களை அமைப்பது எப்படி
நிறுவனப் பெயர், லோகோ, GSTIN ஒவ்வொரு பில்லிலும் அச்சாகும்; அதனால் முதல் பில்லுக்கு முன்பே அமையுங்கள்.
படிகள்
படி 1: மெனுவில் கடைசியாக இருக்கும் Settings-ஐ அழுத்துங்கள்.
படி 2: General tab-ல் நிறுவனப் பெயர் டைப் செய்து லோகோ சேருங்கள்.
படி 3: Timezone, currency, தேதி வடிவம் சரிபாருங்கள். இந்தியாவுக்கு Asia/Kolkata, INR.
படி 4: GST configuration-ல் GSTIN, மாநிலம், பதிவு முகவரி நிரப்புங்கள்.
படி 5: கீழே scroll செய்து Save Settings-ஐ அழுத்துங்கள்.
படி 6: Feature controls-ல் தேவையானதை on செய்யுங்கள்: Invoice button (ஒரே தொடுதலில் சேமித்து invoice திறக்க), Track stock (இருக்கும் ஸ்டாக்கைத் தாண்டி பில் இல்லை), Auto-hold (கடன் வரம்பைத் தாண்டிய கடைக்கு பணம் கட்டும் வரை பில் நிறுத்தம்), Cash and bank tracking. மாற்றங்கள் உடனே வேலை செய்யும்.
படி 7: Vehicles tab-ல் லைவ் லொகேஷன் tracking-ஐ on செய்தால் வேன்கள் வரைபடத்தில் தெரியும்.
படி 8: Security tab-ல் உங்கள் password மாற்றலாம்; நாள் முடிவுக்குத் தனி password-உம் அமைக்கலாம்.
படி 9: Backup and restore tab-ல் Download data backup. வாரம் ஒரு முறை செய்து கோப்பைப் பத்திரமாக வையுங்கள்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- ஸ்டாக் எண்ணாதவர்கள் தவிர மற்றவர்கள் Track stock-ஐ on-லேயே வையுங்கள்: இல்லாத பொருளுக்கு வேன் பில் போடுவதைத் தடுப்பது அதுதான்.
அடுத்து
உங்கள் சொந்தத் தொழிலில் முயன்று பாருங்கள்.
14 நாள் இலவசம், கார்டு வேண்டாம். ஒரு படியில் சிக்கலா? WhatsApp-ல் எந்தப் படி என்று சொல்லுங்கள்.

